October 20, 2013

ஒரு நாள் , மாதங்கள் - தமிழ்

நாள் என்றால் என்ன ?
இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய(சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.
வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும்.
ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்
1 நாள்              =   60 நாளிகை
1 நாளிகை      = 24 நிமிடங்கள்
2 1/2 நாழிகை = 1 மணி
தமிழ் மாதங்கள்
சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்திரையாகும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு இராசியிலும் சூரியன் பயணம் செய்யும்போது 12 மாதங்களும் ஏற்படுகின்றன. தமிழ் மாதங்களின் பெயர்களும், அந்தந்த மாதங்களில் சூரியன் பயணம் செய்யும் இராசிகளும் கீழே தரப்பட்டுள்ளன.
படிமம்:Month general.jpg
இராசிச் சக்கரத்தில் சூரியனின் இயக்கத்தின்போது உண்டாகும் தமிழ் மாதங்களைக் காட்டும் விளக்கப்படம்.
-
மாதம்
-
இராசி
1
-
2
-
3
-
4
-
5
-
6
-
7
-
8
-
9
-
10
-
11
-
12
-

தமிழரின் பருவங்கள்

தமிழர்கள் ஆறு பருவகாலங்களை வகுத்துள்ளனர்
பருவ காலம்
ஆங்கில நாட்காட்டியில்
தமிழ் மாதங்கள்
இளவேனில்
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14
சித்திரை, வைகாசி
முதுவேனில்
ஜூன் 15 to ஆகஸ்டு 14
ஆனி, ஆடி
கார் - மழை
ஆகஸ்டு 15 to அக்டோபர் 14
ஆவணி, புரட்டாசி
கூதிர் - குளிர்
அக்டோபர் 15 to டிசம்பர் 14
ஐப்பசி, கார்த்திகை
முன்பனி
டிசம்பர் 15 to பிப்ரவரி 14
மார்கழி, தை
பின்பனி
பிப்ரவரி 15 to ஏப்ரல் 15
மாசி, பங்குனி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.
எண்கிருஷ்ண பட்சம்சுக்கில பட்சம்தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1பிரதமைபிரதமைமுதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2துவி்தியைதுவி்தியைஇது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3திருதியைதிருதியைகெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4சதுர்த்திசதுர்த்திநான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5பஞ்சமிபஞ்சமிஇது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6சஷ்டிசஷ்டிநாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7சப்தமிசப்தமிசூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8அஷ்டமிஅஷ்டமிஇன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9நவமிநவமிஅம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10தசமிதசமிதர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11ஏகாதசிஏகாதசிமஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12துவாதசிதுவாதசிமஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13திரயோதசிதிரயோதசிமன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14சதுர்த்தசிசதுர்த்தசிகாளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15அமாவாசைபௌர்ணமிஅமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.