February 23, 2012

Thiruvannamalai Girivalam Date 2012

 மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.
Month Grivalam Day Start Date & Time End Date & Time
January 08-Jan-2012 Sunday 08-Jan-2012 01.19pm 09-Jan-2012 01.41pm
Feburaury 07-Feb-2012 Tuesday 06-Feb-2012 04.59 am 07-Feb-2012 04.18 am
March 07-Mar-2012 Wednesday 07-Mar-2012 05:43 pm 08-Mar-2012 04:09 pm
April 06-Apr-2012 Friday 05-Apr-2012 03:58 am 06-Apr-2012 01.50 am
May 05-May-2012 Saturday 05-May-2012 11:58 am 06-May-2012 08:58 am
June 03-June-2012 Sunday 03-Jun-2012 02:54 pm 04-Jun-2012 12:53 pm
July 03-Jul-2012 Tuesday 02-Jul-2012 01:06 am 03-Jul-2012 12:06 am
August 01-Aug-2012 Wednesday 01-Aug-2012 10:11 am 02-Aug-2012 09:13 am
August * 31-Aug-2012 Friday 30-Aug-2012 10:07 pm 31-Aug-2012 09:08 pm
September 29-Sep-2012 Saturday 29-Sep-2012 08.09 am 30-Sep-2012 08:13 am
October 29-Oct-2012 Monday 28-Oct-2012 12:07 am 29-Oct-2012 01:07 am
November 27-Nov-2010 Tuesday 27-Nov-2012 05:24 pm 28-Nov-2010 07:24 pm
December 28-Dec-2012 Tuesday 27-Dec-2012 03:10 pm 28-Dec-2012 03:16 pm


கிரிவலம் வருவதற்கு சிறந்த நாட்கள்
இறைவனால் (இயற்கையாக) படைக்கப்பட்ட அனைத்து நாட்களுமே சிறந்த நாட்கள்தான். இருப்பினும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றில் கிரிவலம் வருவதற்கு சிறந்தது பெளர்ணமி நாட்களே. 

பொருள் தரும் பெளர்ணமி
இந்த தினத்தில் கிரிவலம் வருபவர்களுக்கு பொருள், நோய் இல்லாத வாழ்க்கை, நினைத்த காரியம் கைகூடுதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எந்த நாளாக இருந்தாலும் சரியான முறையில், அமைதியாக கிரிவலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது மட்டும் திண்ணம்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். பௌரணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.

கிரிவலப் பயணம்

கிரிவலமானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
கிரிவலத்தில் முதல் அரை கிலோமீட்டர் பயணத்தில் நம் கண்ணுக்கு தென்படுவது இந்திர லிங்கமாகும். இது சாலையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது. புதிய வேலை, பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றிற்கு இவரை வேண்டிக் கொள்ளலாமாம். அதன் பின்பு நந்தி விநாயகர் ஆலயம், அக்னி விநாயகர் ஆலயமும் சிறிது தொலைவில் இருக்கின்றன. வழி நெடுகே மேலும் பல சிறு கோவில்களும் இருக்கின்றன. 
பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு அரை அல்லது ஒரு கிலோமீட்டருக்கும் இடைவெளியில் சாலையின் இடது பக்கம் பலகையில் கடந்து வந்த தூரம் மற்றும் கடக்க வேண்டிய தூரம் ஆகியவற்றை தெளிவாக எழுதியிருக்கின்றனர். மொத்தம் பதினான்கு கிலோமீட்டர்களை கடக்க வேண்டும். 
அடுத்த ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் வருவது அக்னி லிங்கமாகும். இது சாலையின் வலது புறத்தில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது. இங்கு மட்டும் பிரகாரத்தை சுற்றி வந்து அக்னிலிங்கேஸ்வரரை தரிசிக்க வேண்டியிருக்கிறது. மூலவருக்கு எதிரில் ஒரு பலிபீடம் சற்று சாய்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான லிங்கக்கோவில்கள் இரண்டு அடுக்கு கருவறை மற்றும் சுற்று பிரகாரம் மட்டுமே கொண்டுள்ளன. வெளியில் வந்து மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தால் சற்று தொலைவில் வலது பக்கத்தில் இரமணரின் ஆசிரமம் இருக்கிறது. இதுவும் நன்றாக பரந்து விரிந்திருக்கிறது. உள்ளே இடது பக்கத்தில் பெரிய தியான மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த மண்டபத்தில் உள்ள மேடையில் இருந்துதான் இரமணர் பக்தர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். மேலும் ஆசிரமத்தினுள் இராமானந்தர் மற்றும் இராமகிருஷ்ணரின் சீடரான நிரஞ்சனானந்தர் சமாதிகளும் அமைந்துள்ளன. மீண்டும் கிரிவலப்பாதை. அடுத்த சிறிது தூரத்தில் யோகி ராம்சுரத்குமாரின் ஆசிரமம் இடதுபுறத்தில் சற்று உள்ளார்ந்து அமைந்திருக்கிறது.
கடந்து வந்த தூரம் 3.5 கிலோமீட்டர் என்ற அறிவிப்பு பலகையுடன் அடுத்து இருப்பது எமலிங்கம். இதுவும் சாலையின் இடதுபுறத்தில் அமந்துள்ளது. எமபயம் நீங்க வேண்டி வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து துர்வாச மகரிஷி ஆலயம் உள்ளது. 
அடுத்த இரண்டு கிலோமீட்டரில் (கடந்து வந்த தூரம் 5.5 கிலோமீட்டர்) நிருதிலிங்கம் வருகிறது. தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்குவதற்கும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு வேண்டிச் செல்கின்றனர். அடுத்ததாக வலதுபுறத்தில் நவலிங்க கோவில் ஒன்று உள்ளது. 
அடுத்த அரை கிலோமீட்டரில் அண்ணாமலையார் கோவில் ஒன்று வருகிறது. 
மீண்டும் கிரிவலப் பாதையில் தொடர்ந்தால் சிறிது தூரத்தில் அடிமுடி மகரிஷி சமாதி அமைந்துள்ளது. அதையும் பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் இந்த மகரிஷியின் பெயர்க் காரணம் கேட்டோம். ஜோதி வடிவமாக திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் காட்சி தந்த சிவனின் அடிமுடி திருவிளையாடலை தன் தவத்தின் மூலம் உணர்ந்து கொண்டவராம். ஆகவே இவருக்கு அப்பெயர் ஏற்பட்டது எனக் கூறுகின்றனர்.
அடுத்த அரை கிலோமீட்டரில் வருவது வருணலிங்கம். இவரை வேண்டிக் கொண்டால் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபடலாம் என்று சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து மகாகாளி சித்தர் பீடமும் ஷீர்டி சாய்பாபாவின் ஆலயமும் இருக்கின்றன. 
அடுத்து 8.5 கிலோமீட்டரில் அமைந்திருப்பது வாயு லிங்மாகும். இவரை சுவாசம் சம்பந்தமான மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக வேண்டி தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதன் பின்பு சிறிது தூரத்தில் வலதுபுறத்தில் காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடதுபுறத்தில் லோபமுத்ரா அகஸ்தியர் ஆசிரமமும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து பஞ்சமுக தரிசன பகுதியும் வருகிறது. இங்கு இரண்டு சித்தர்களின் சமாதிகள் இருக்கின்றன. 
அடுத்த இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் குபேர லிங்கம் இருக்கிறது. இங்கு மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்று அலைமோதுகிறது. நாட்டிற்கும் வீட்டிற்கும் செல்வம் வேண்டி வணங்குகின்றனர். இங்கு மூலவரின் கருவறைக்குள் நாணயங்களை எறிகின்றனர். பதிலுக்கு அவர் நமக்கு அளவில்லா செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அடுத்ததாக உச்சிப்பிளையார் கோவிலும் அதைத் தொடர்ந்து இரண்டு கிலோமீட்டரில் ஈசான்ய லிங்கமும் இருக்கின்றன. ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பவர்கள் இவரை வணங்கி கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாமாம். 
அடுத்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அண்ணாமலையார் கோவிலின் கிழக்கு இராஜகோபுரத்தை அடைந்து விடலாம்.கோவிலினுள் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மாளும் குடிகொண்டிருக்கின்றனர். கோவில் உள்ளே மூன்று கோபுரங்களுடன் மிக விஸ்தீரணமாக இருக்கிறது.

மலையின் அமைப்பு
அருணாச்சல மலையானது 2668 மீட்டர் உயரத்துடனும் 14 கிலோமீட்டர் குறுக்களவுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருன லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.

மலை தோன்றிய வரலாறு
ஒரு முறை அயனுக்கும் அரிக்கும் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இருவரும் தத்தம் தொழில்களை மறந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் இருவருக்கும் இடையே பெரும் போரும் மூண்டது. பாதிக்கப்பட்ட தேவர் முதலானோர் சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தார். போர் புரிந்து வரும் இருவருக்கும் இடையில் பெரும் அக்னி மலையாக தோன்றினார். இந்த ஒளி மலையைப் பார்த்த திருமாலும், பிரம்மனும் அளவு கடந்ததுள்ள இந்த மலையின் அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றரோ அவரே பெரியவர் என்பதாக முடிவு செய்தனர்.
பிரம்மா அன்னப்பறவையாய் மாறி ஈசனின் திருமுடி தேடிச் சென்றார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து சிவனின் திருவடி தேட முற்பட்டார். அடி முடியை இருவரும் காண முடியாததால் தாம் தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் நீங்கி சிவனைச் சரண் அடைந்தனர். (சிவனின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதும் அதனால் சீற்றமுற்ற சிவன் பிரம்மாவுக்கு வழிபாடு இல்லாமல் போகக் கடவது என்றும், தாழம்பூவை இனி தன் பூஜையில் பயன்படுத்தக் கூடாது என சபித்ததும் தனிக்கதை)
சினம் தணிந்த சிவபெருமான் ‘நாம் இத்தலத்தில் அருள்பாலித்ததால் இன்று முதல் இத்தலத்தைச் சுற்றிலும் மூன்று யோசனை தூரம் வரைக்கும் தூய்மையான புனித பூமியாக விளங்கும். அகண்ட ஒளி வடிவாயுள்ள இம்மலை சிறிய உருவம் கொண்ட மலையாக ஆகும். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு பிறவி நோய் நீங்கும். இந்த மலையும், நகரமும் பிரளய காலத்திலும் அழிவின்றி நிற்கும். கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் மலையின் உச்சியில் யாம் காண்பிக்கும் பேரொளியைக் கண்டு தொழுவோர்க்கும் அவர் தம் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் வீடு பேறு உண்டாகும்’ என்று கூறி ஆசிர்வதித்தார்.

மலையின் சிறப்பு
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. பௌர்ணமி தோறும் பல இலட்சம் பக்தர்கள் இங்கு மலை வலம் வருகின்றனர். இம்மலையின் பெயரினை அடிக்கடி சொல்லி வருவது திரு ஐந்தெழுத்தை (ஓம் நமசிவாய) கோடி முறை உச்சரிப்பதற்குச் சமம் என்பது புராணம் கூறும் செய்தியாகும்.

மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.

Thakkolam Payandiamman Temple




Courtesy:http://takkolampayandiamman.in/

February 12, 2012

India and Sri Lanka in Australia Tri-Series 2012


DateMatch DetailsTimeVenueD/N
GMTISTYour TimeGroundCity
Feb 05 - SunAustralia v India, 1st Match03:2008:5008:50Melbourne Cricket GroundMelbourne
Feb 08 - WedIndia v Sri Lanka, 2nd Match04:2009:5009:50W.A.C.A. GroundPerth
Feb 10 - FriAustralia v Sri Lanka, 3rd Match04:2009:5009:50W.A.C.A. GroundPerth
Feb 12 - SunAustralia v India, 4th Match03:2008:5008:50Adelaide OvalAdelaide
Feb 14 - TueIndia v Sri Lanka, 5th Match03:2008:5008:50Adelaide OvalAdelaide
Feb 17 - FriAustralia v Sri Lanka, 6th Match03:2008:5008:50Sydney Cricket GroundSydney
Feb 19 - SunAustralia v India, 7th Match03:2008:5008:50Brisbane Cricket GroundBrisbane
Feb 21 - TueIndia v Sri Lanka, 8th Match03:2008:5008:50Brisbane Cricket GroundBrisbane
Feb 24 - FriAustralia v Sri Lanka, 9th Match03:2008:5008:50Bellerive OvalHobart
Feb 26 - SunAustralia v India, 10th Match03:2008:5008:50Sydney Cricket GroundSydney
Feb 28 - TueIndia v Sri Lanka, 11th Match03:2008:5008:50Bellerive OvalHobart
Mar 02 - FriAustralia v Sri Lanka, 12th Match03:2008:5008:50Melbourne Cricket GroundMelbourne
Mar 04 - SunTBC v TBC, 1st Final03:2008:5008:50Brisbane Cricket GroundBrisbane
Mar 06 - TueTBC v TBC, 2nd Final03:2008:5008:50Adelaide OvalAdelaide
Mar 08 - ThuTBC v TBC, 3rd Final (if needed)03:2008:5008:50Adelaide OvalAdelaide

February 8, 2012

பிரதோஷ நாட்கள் 2012



06-Jan-2012
வெள்ளிக்கிழமை
20-Jan-2012
திங்கட்கிழமை
05-Feb-2012
ஞாயிற்றுக்கிழமை
19-Feb-2012
ஞாயிற்றுக்கிழமை
06-Mar-2012
செவ்வாய்கிழமை
20-Mar-2012
செவ்வாய்கிழமை
04-Apr-2012
புதன்கிழமை
18-Apr-2012
புதன்கிழமை
04-May-2012
வெள்ளிக்கிழமை
18-May-2012
வெள்ளிக்கிழமை
02-Jun-2012
சனிக்கிழமை
16-Jun-2012
சனிக்கிழமை
01-July-2012
ஞாயிற்றுக்கிழமை
16-July-2012
திங்கட்கிழமை
30-July-2012
திங்கட்கிழமை
15-Aug-2012
புதன்கிழமை
29-Aug-2012
புதன்கிழமை
13-Sep-2012
வியாழக்கிழமை
27-Sep-2012
வியாழக்கிழமை
13-Oct-2012
சனிக்கிழமை
27-Oct-2012
சனிக்கிழமை
11-Nov-2012
ஞாயிற்றுக்கிழமை
26-Nov-2012
திங்கட்கிழமை
11-Dec-2012
செவ்வாய்கிழமை
25-Dec-2012
செவ்வாய்கிழமை


பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும்பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறைதேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசிநெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம். 

தேவர்களும்அசுரர்களும் ஒருமுறை ஒருவருக்கொருவர் பகைத்துப் போர் புரிந்தார்கள். தேவர்கள் நரைமூப்புதிரைமரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். தேவர்கள்பிரம்மதேவரின் துணையுடன் திருமாலைக் காணச்சென்றனர். திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமில்லாத வாழ்க்கை வாழலாம் என திருமால் கூறினார். மந்தரகிரியை மத்தாகவும்சந்திரனை தறியாகவும்வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்த்ரகிரியை தனது முதுகில் தாங்கினார். 
அந்த நாள் தசமி திதிஅன்று ஒரு வேளையுண்டுதிருப்பாற்கடலைக் கடைந்தார்கள். மறு நாள் ஏகாதசி, பதினோராவது திதிஅவ்வாறு பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு வருத்தம் தாளாமல் நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும்கடலில் தோன்றிய ஆலமும் கலந்து ஆலாலம் எனப் பேர் பெற்றது. தேவர்கள் பயந்து ஓடினர். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுவிஷ வேகத்தால் நீல நிறம் ஆனார். வானவர்கள் அஞ்சி திருக்கயிலாயம் சென்று சிவபிரானை தஞ்சமடைந்தனர்.


இவர்களைக் காப்பாற்ற ஆலால விஷத்தினை எடுத்து உண்டு நீலகண்டன் எனப் பேர் பெற்றார் சிவபிரான். அந்த விடம் உள்ளே சென்றால் உள் முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். உமிழ்ந்தால் வெளி முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்து விடும். ஆகையால்உண்ணாமலும்உமிழாமலும்கண்டத்தில் தரித்தருளினார். சிவபிரானின் கருணைக்கு இது ஒன்றே சாட்சி. 

இதன் பின் மீண்டும் பாற்கடலைக் கடையும்போதுபாற்கடலில் இருந்துலெட்சுமி, ஐராவதம்காமதேனுகற்பகத்தருசிந்தாமணிகௌஸ்துபமணி சூடாமணி முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏகாதேசியன்று இரவு முழுவதும் பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள் துவாதேசியன்றுஅதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

மறுநாள் திரயோதசி (பதிமூன்றாம் நாள்அன்று தேவர்கள் சிவபிரானை முன்னாளே வணங்காது இருந்த தங்கள் குற்றத்தை உணர்ந்துஅவரிடம் மன்னிப்பு கேட்டனர். 
சிவபிரான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள் புரிய எண்ணி கயிலையில் அன்று மாலை (4:30 மணி முதல் 6:00 மணி வரை) பிரதோஷ வேளையில் தம் திருமுன் இருந்த ரிஷப தேவரின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று அம்பிகைக் காணத் திருநடம் புரிந்தார். அது முதல் திரயோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று பெயர்பெற்றது. 

அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு.
நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும்இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. 
மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.
எனவேபிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும்நினைவாற்றல் பெருகும்தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்துவில்வ இலைசங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.