March 8, 2011

அமுதவல்லி சமேத பானீச்சுவரர்


தெய்வலோகத்தில் எல்லாவற்றையும் மனசங்கற்பத்தினாலே நியமிக்கத்தகுந்த மயன் என்பவனுக்கு உஷையென்றும் சாயை யென்றும். இரண்டுபுத்திரர்களிருந்தனர், இவ்விருவரையும் மகாதிவ்விய தேச சுடன் பிரகாசிக்கத் தகுந்த சூரிய பகவானுக்கு விவாகம் செய்துகொடுத்தனர், அவ்விரு பெண்மணிகளையும் மனைவிமார்களாகக் கொண்டு கதிரோனானவன் தன்னுலகடைந்து முதனாள் உஷையுடனே ஆலிங்கனம் செய்யச் சமீபித்த மாத்திரத்தில் அவள் ஓவென்று அலறி மூர்ச்சித்துக் கீழே விழுந்து ஸ்மரனை யற்றிருந்தனள்,


கதிரோன் கண்டுகண்கலக்க முற்றுத் தோழியரைக் கொண்டு அவளுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்யும்படி கட்டளையிட்டுப் பின்பு. மற்றைய நாள் சாயையிமஞ்சென்று அந்நனமே சமீபித்தனன், அவளும் திடுக்கிட்டுக் கண்மூடி ஒருமறம் சுருண்டுவிழுந்தனள்.
ஆதித்தன் அவளுக்கும் மற்றையரைக்கொண்டு உபசாரஞ் செய்வித்துத் தன்னற்தனியனாகவிருந்து ஆலோசிக்கத் தொடங்குகையில்.


தனக்கு இயற்கையாக அமைந்துள்ள பிரகாசத்தின் உஷணம் சியாதவர்களாய் இங்ஙனம் ஆயினர் எனத்தெரிந்து இதற்குதீர்வை என்னவென எண்ணயென்ணத் தனது சினேசனாகிய சந்திரன் தனது மாமனால் தனக்குக் கிடைத்த சாபத்தினை விமோசனம்செய்து கொண்ட விஷயத்தினைக் கேள்வியுற்று மனத்திடங் கொண்டு தனது மனைவிமார் இருவர்களையும் அழைத்துக் கொண்டு தக்கோல மாநகரினை அடைந்து கங்கையிற்படிந்து கருணானிதியினைத் தரிசனஞ்செய்து கொண்டு தேனீச்சுவரர் ஆலயத்திற்கு சோமநாதர் ஆலயத்திற்கு மத்தியல் ஒரு சிவ லிங்கப்பெருமாலினைப் பிரதிஷ்டைசெய்து அமுதவல்லி சமேத பானீச்சுவரர் எனத்திருப்பெயர் சாத்திப் பூசித்து வருகையில் ஒருநாள் திருவூறல் நாதர் நாராயணன் நான்முகன் முதலாகிய தேவர்கள் சூழ வெண்ணீறு திருமேனியிலங்க. செஞ்சடையின்றாழ இளம்பிறை முடிமிசை விளங்க. நாகமாகிய உபவீதந்துலங்க. கங்கண முதலிய பணிகளும் பணிகளாய் நிற்க இடையிலே புலித்தோலிலங்க வரதா பயங்களைத் திருக்கரங்களாற்காட்டி. வெள்ளி இடபகவான மேற்கொண்டு கோடி சூரியப்பிரகாசமும் கோடி சந்திரசீதளமும் பொருந்திப்படிக முதலிய பலவிரத்தினங்களாற் பல வலங்காரங்களைப் பெற்றுச் சுந்தர வடிவத்துடன் தரிசித்தோர் ஆனந்த சாகரத் தழுந்த சூரியனுக்குத் தரிசனங் கொடுத்து அவனைப்பார்த்து 


ஆதித்தனே! நீ செய்த தவத்தாலும் பூஜையாலும் தியான யோகத்தாலும் மூலமந்திர செபத்தாலும் நாம் மகிழ்ச்சி எய்தி வந்தோம் நீ இனி உன்பத்தினிமாருடன் சுகமாக வாழ்ந்து வரக்கடவை உன்வெப்பம் அவர்களைப்பீடிக்காது அவர்கண்மாட்டுச் சந்திரனைப் போல விளங்குவையெனப் பலவரமீந்து அந்தர்த்தியானமாயினர். சூரியன் ஆனந்தக் கண்ணீர் பொழிந்து திருவூறனாதன் திருவடியில் பலதரம் வீழ்ந்து. அருமறை முடிவின் அகப்பொருளாய் மறைகளனைத்தும் மறைத்திட்டுரைக்கும் மாமணியாய் முனிவர் போற்றும் மூவர் முதல்வனாய். முத்தியளிக்கும் முக்கட்புரமனாய். புண்ணியவடிவப் புருஷோத்தமனாய். கலிமலங்கழிக்கும் கற்பகக் கொழுந்தாய். போகமளிக்கப் போந்தப்பெருக்காய் நின்ற நின் மலனே யெனப்பலவாறு தோத்தரித்துப் பிரியமனமின்றி யொருவாறு துணிந்து நீங்கித் தனது மனைவிமாருடன் தன்னிருப்பிடமடைந்து சுகித்தனன்,

No comments:

Post a Comment