February 11, 2011

தற்காத்துக் கொள்ள தக்கோலம் எனும் சித்த மருத்துவ மூலிகை

தக்கோலம் = ஒரு நறுமணச்சரக்கு

தக்கோலம் பஞ்சவாசம் என்னும் ஐம்மணங்களுள் ஒன்றாகவும் முப்பத்திருவகை ஓமாலிகைகளுள் ஒன்றாகவும் கூறப்பெறும்.

"தக்கோலந் தீம்பூத் தகைசா லிலவங்கங் கப்பூரஞ் சாதியோ டைந்து" (சிலப். 5: 26,உரை)

"இலவங்கம்...... தக்கோலம்......... ஓமாலிகை" (சிலப்.6:77,உரை).

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாலடியார் - தூய்தன்மை

43. தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு.வரத பண்டிதர் என்னும் புலவர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
இவரது செய்யுள் நூல்கள்: சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம், அமுதாகரம், கிள்ளைவிடுதூது, பிள்ளையார் கதை.

இதில் பிள்ளையார் கதை - சரஸ்வதி துதி

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

தக்கோலம் என்ற சித்த மருத்துவ மூலிகையை தேநீர், பிரியாணியில் பயன்படுத்துவதன் மூலம் பன்றிக் காய்ச்சலை தடுக்க முடியும் என்று ஆரோக்யா சித்த ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.சிவராமன் தெரிவித்தார்.


இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஒரே மருந்து டாமி ப்ளூ ஆகும். இந்த மருந்து தயாரிப்பதற்கான மூலப் பொருள் (சிம்மிக் ஆசிட்) தக்கோலம் என்ற மூலிகையில் இருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது.


பிரியாணியை மணமாகச் செய்ய பிற மசாலாக்களுடன் தக்கோலத்தைச் சேர்ப்பதுண்டு. பன்றிக் காய்ச்சல் வைரஸ் கிருமிக்கு எதிராக ஓரளவு பயன்தரும் தக்கோலத்தை அன்றாடம் தேநீர், பிரியாணி மற்றும் குருமாக்களில் பயன்படுத்தலாம். தக்கோலம் பல்வேறு வைரஸ்களைத் தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

வேம்பு முதல் 30 தாவரங்களில் "சிம்மிக் ஆசிட்' என்ற மூலப் பொருள் இருப்பதாகத் தெரிகிறது.  நிலவேம்புக் குடிநீரும் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பட பயன்படும். நெல்லிக்காயை தினசரி சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்க உதவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Courtesy: Dinamani

No comments:

Post a Comment