December 17, 2010

திருமாம்பழநாத ஈசுவரர்


சிவமயம்

அஸ்தினாபுரத்தில் அரசாட்சி செய்து கொண்டு இருந்த பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனுடன் சூதாடித் தங்களோடு நகரங்களைத் தோற்று ஆதரவற்றவராய்த் தங்கள் பத்தினியாகிய பாஞ்சாலியுடன் ஆரணிய சஞ்சாரஞ் செய்கையில். தங்கள் சத்துருவை செயங் கொண்டு தங்கள் நாட்டினை மறுபடியும் கைகொள்ள தங்கள் மைத்துனனாகிய கிருஷ்ணமூர்த்தியின் கட்டளையின்படி சர்வ பக்த ஜனசத்ரு அரணம் செய்யும் சிவபெருமான் திவ்விய தலங்களைத் தரிசித்துக் கொண்டே யாத்திரை செய்து வருகையில்.
திருவூறல் தலத்தினை அடைந்து


சிலநாள் தங்கி வாழுகையில் ஒருநாள் அருச்சுனனும் திரௌபதியும் உல்லாசமாக ஒரு சோலையின் வழியே வருகையில் அவ்வீடத்திருந்த ஒரு மரத்திலுள்ள பழத்தினைப் பறித்துக் கொடுக்கும்படி மனைவி கேட்க அர்ச்சுனன்  தன் வில்லினைக் கொண்டடித்து வீழ்த்திக் கொடுத்தன், இதனைக்கண்ட அத்தலத்து முனிவர் சிலர் அவர்களை நோக்கி அந்தோ! என்ன காரியஞ்செய்தீர்கள். பெரியோர்கட்கு அபராதம் விளைத்தீர்கள்,


இம்மாமரம் பனிரெண்டு வருடத்திற்கு ஒருதரம் இரண்டு வருடம் புட்பித்து.  இரண்டு வருடம் பிஞ்சியாகி. 2 வருடம் காயாகி. இரண்டு வருடஞ் செங்காயாகி. நான்கு வருடத்தில் இரசம் பெருக்க்கனியாகி எங்கள் ஆசிரியர் மித்திரமகா முனிவர் திருக்கரத்தில் வந்து இறங்கும், அந்தப்பழத்தினை யவர்தாயினு நல்ல சங்கரனாகிய திருவுறனாதனுக்குப் படைத்துச் சிவஞானச் செல்வராயய் இருப்பவர். இன்னம் இரண்டொரு நாளில் உதவும் கனி இங்ஙனம் செய்து விட்டீர் அவர் சாபத்திற்குள்ளானீர் என வருத்தமுற்றனர்,


அருச்சுனன் பயந்து தனத சகோதரர்கட்குத் தெரிவித்து ஆலோசித்து அம்மரத்தடியில் திருவருட் சொரூபமான ஒரு சிவலிங்கப் பெருமானை மாம்பழநாதரென மரகதவல்லி சமேதராக வெழுந்தருளச் செய்து திருமஞ்சனமாட்டி அலங்கரித்து ஏத்துதலும் நானைய தினம் எனது சிவமக்த சிரோமணியாகிய கண்ணன் இவ்விடம் வருவன் அவன் சொன்னபடி நடந்து கொள்ளுவீரெனச் சாசுவிதானந்த பூரணனாகிய சிவபெருமான் திருவருளாகிய ஆகாயத்தனிடத்தேயொரு அசரீரி பிறந்தது கேட்டானந்தித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் முன்னம் கிருட்டிணமூர்த்தி வந்து நின்றனர் அவரிடத்து நடந்த விருத்தாந்தத்தை சொல்லியவுடன் அவர் மாம்பழ நாதரை வணங்கித் தியானஞ் செய்து கொண்டு சொல்லுவாராயினர்,


பாண்டவர்களே! நீங்கள் அனைவரும் உமது பத்தினியுடன் அம்மரத்தடியிற் சென்று அவரவர்கள் மனோ நிச்சயத்தினைக் கூறின் மாம்பழம் பழையபடி மரத்தில் பொருந்திவிடும் முனிவர் சாபத்தினின்றும் தப்பித்துக் கொள்ளுவீர் என்றனர்,


முதலில் தர்மன். அந்தபழத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு மரத்தடியிற் சென்று தருமமும். சத்தியமும். கீர்த்தியும் கண்ணனும் என் இடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கப் பாவமும் பொய்யும் கோபமும் என்னை விட்டு நசித்துப் போகக் கடவதென்று எண்ணியுள்ளேன் என்றவுடன் மாம்பழம் 2 முழம் உயர்ந்தது,


பீமனானவன். பிறர் பத்தினி எனக்குத் தாயென்றும். எட்டி பழமென்றும். ஒருவரையொருவர் வசை மொழி கூறுதல் பெருமையல்லவெனவும். பிறாதுயரம் என் துயரமெனவும் எண்ணியுள்ளேன் என்றவுடன் மேலும் இரண்டு முழம் உயர்ந்தது.


அருச்சுனன். புருடவடிவுடையோர் புகழுடன் வாழ்ந்து ஞானபோதத்தையறிய வேண்டும் அல்லது சுத்த வீரனாக வேண்டும் என் வில்லினையாவது என் தமையனையாவது பழித்தவர்களையும் என்னை எதிர்ததவர்களையும் கொல்லுதல் வேண்டும் என்பது என் பிரதிஞஞையை என்றவுடன் மேலும் இரண்டு முழம் உயர்ந்தது.


நகுலன். மேற் குலத்தாயினும். நற்குணமுடைய வராயினும் செல்வமும் உடையவராயினும், சகல நலங்களும் உடையவராயினும் கல்வி இல்லாதவர்களை மனமில்லாத முறுக்கம் பூவென மதிப்பேன் என்றவுடன் மேலுமிரண்டு முழமுயர்ந்தது.


சகாதேவன். சத்தியமே தந்தையாகவும். தருமமே பத்தினியாகவும். பொறுமையே புத்திரனாகவும் கொண்டிருக்கிறன் என்றவுடன் மேலுமிரண்டு முழம் உயர்ந்தது


திரௌபதை. பஞ்சபாண்டவர் எனக்குப் புருடர்களாக பிறக்கவும். இன்னம் வேறொருவன் மீதும் என் மனம் நாடுகிறது ஆகையினால் உலகத்தல் புருஷர்களே இல்லாதிருக்கில் ஸ்திரீகள் பதிரவிரதைகளாவர் என்பது என் கொள்கை என்றவுடன் பழம் மரத்தில் ஒட்டிக் கொண்டது,

பாண்டவர்கள் முனிவர் சாபத்தினின்றும் மாம்பழநாதர் கிருபையால் தப்பித்துக் கொண்டு வேறு
வனம் நடந்தனர், கிருட்டிணனும் விடை பெற்றுத் துவாரகைக்கு ஏகினன்,
திருச்சிற்றம்பலம்

1 comment: