December 11, 2010

கங்காதீசுவரர் ஆலயம்


சிவமயம்


ஜலநாத ஈசுவரர் ஆலயத்திற்கு வடப்புறமாக சற்று தொலைவில் நதிக்கரையில், கரையை ஓட்டித் தரைமட்டத்திற்க்குக் கீழே உள்ள ஆலயத்தினுள் சென்றால் தெற்கு நோக்கியுள்ள வாயிலுடன் இக்கோயில் அமைந்துள்ளது. 

கோயிலினுள் நுழைந்து மேற்கு நோக்கித் திரும்ப மகனவல்லி அம்பாள் சந்நிதியும், ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் கிழக்கு நோக்கியுள்ள கங்காதீசுவரர் கருவறையை அடையலாம். அம்பிகையை தரிசித்து விட்டுத்தான் உள்ளே போய் கங்காதீசுவரரை தரிசிக்க வேண்டும். அப்படியோரு வித்தியாசமான அமைப்பாகும்.

கருவறையில் மேற்பகுதியில் உள்ளது. சத்திய கங்கை தீர்த்தம் சதா வந்து கொண்டிருந்தது. இந்த நீர் கோயிலின் உள்நீக்கிச் சென்று, அங்கு சிவலிங்கப் பகுதியைச் சுற்றிச் சென்று, கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள மற்றொறு நந்தியின் வாயின் வழியாக பொய்கையில் விழுகிறது.

இங்குள்ள நந்திதேவரால்தான் இக்கோயிலுக்குச் சிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நந்தியின் அமைப்பையும் செயல்பாட்டையும் வைத்துத்தான் அன்றையநாளில் திருஊறல் என்று அழைக்கப் பட்டது.வாயின் வழியே தண்ணீர்.இந்தக் கோயில் இருக்கும் பகுதியில் நீர்நிலை உயர்ந்து காணப்படுவதால் எந்த இடத்தில் நந்தி சிலையை அமைத்தால் தொடர்ச்சியாகத் தண்ணீர் நந்தியின் வாய்வழியாக வழிந்து கொண்டேயிருக்கும் என்பதைக் கணக்கிட்டு அதன்படியே அமைத்த அந்தக் காலக் கட்டிடக் கலைஞர்களின் நிபுணத்துவம் போற்றத் தக்கதாகும்.நீர் ஊறிவரும் விதம்.

சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தின் அடிப்பரப்பில் கிழக்குத் திசை நோக்கி வருகிற தண்ணீர் சிவலிங்கத்துக்கு எதிர்ப் புறமாக உள்ள நந்தியின் வாய்க்குள் நுழைந்து வெளியே வருகிறது. பிறகு கர்ப்பக் கிரஹத்தைச் சுற்றியிருக்கிற பள்ளப் பகுதியில் விழுந்து கோயிலின் நுழைவு வாயிலுக்குக் கிழக்குப் பக்கமாக உள்ள கட்டத்தைக் கடந்து (உட்புறமாக) கோயிலுக்கு வெளிப்புறம் கட்டப்பட்டுள்ள குளத்தில் சேர்கிறது. பிறகு மேற்குப் பக்கத்திலுள்ள மற்றொரு நந்தியின் வாயின் வழியே வெளிவந்து கலக்கிறது. ஆனால் தற்போது இந்த அமைப்பு சிதிலமடைந்து கிடக்கிறது.

உததி முனிவர் இப்பொய்கையில் நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்து தம்மைந்தர்க்கு ஏற்பட்ட சாபம் நீங்கச் செய்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment