December 2, 2010

இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி


தமிழகம் முழுவதும் http://www.tneb.in/  இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி  தொடங்கி வைத்தார்.


ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி முதலில் சென்னையில் அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையிலும் இந்த வசதி ஏற்படுத்தப் பட்டது. இப்போது இந்த வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

மின் கட்டண வசூல் மையங்கள் பரவலாக இருந்தாலும் இறுதி நேரத்தில் கட்டணம் செலுத்த வருபவர்களே அதிகம். இதனால், நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து கட்டணத்தைச் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே தாழ்வழுத்த மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் முறை சென்னையில் 2008-ல் தொடங்கப்பட்டது. கோவை மண்டலத்துக்கு 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் இவ்வசதி விரிவுபடுத்தப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் இதை தமிழகம் முழுவதும் நடைமுறைப் படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சி செயல் வடிவம் 
பெற்றுள்ளது.


ரூ. 3 கோடி செலவில் புதிய வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களை நிறுவி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். இப்போது 7 வங்கிகளில் மட்டுமே இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. நுகர்வோர்களின் வசதிக்காக மேலும் பல வங்கிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளோம்.

.

1 comment:

  1. the above given information in tamil is very good and useful and your also providing the information about the tneb jobs even very good for payments of tneb you can visit here.

    ReplyDelete