November 15, 2010

ஜலநாத ஈசுவரர் ஆலயம்



சிவமயம்


இறைவன் பெயர் ஜலநாத ஈசுவரர் - உமாபதி
இறைவி பெயர் கிரி ராஜ கன்னிகம்பாள் - உமையம்மை
பதிகம் திருஊறல் திருப்பதிகம்
பாடியவர் திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் அருளிய திருஊறல் திருப்பதிகம்

மாறில் அவுணர் அரண மவை
மாயவோர் வெங்கணை யாலன்று 
நீறெழ வெய்த எங்கள்
நிமல னிடம் வினவில்
தேற லிரும் பொழிலுந் திகழ்
செங்கயல் பாய்வய லுஞ்சூழ்ந்த 
ஊறல் அமர்ந்த பிரான்
ஒலியார் கழல் உள்குதுமே (1)
மத்த மதக் கரியை மலையான்
மகள் அஞ்ச வன்று கையால்
மெத்த உரித்த எங்கள்
விமலன் விரும்பு மிடம்
தொத்தலரும் பொழில் சூழ் வயல்
சேர்ந் தொளிர் நீலநாளும் நயனம்
ஒத்தல ருங்கழ னித்திரு
ஊறலை உள்குதுமே, (2)

ஏன முருப்பி னுடும் எழில்
ஆமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான் மறிக்கைக்
கடவுள் கருது மிடம்
வான மதிதடவும் வளர்
சோலைகள் சூழ்ந் தழகார் நம்மை 
ஊன மறுத்த பிரான் திரு
   ஊறலை உள்குதுமே, (3)

நெய்யணி மூவிலைவேல் நிறை
வெண் மழுவும் அனலும் அன்று
கையணி கொள்கையினான் 
கடவுள் இடம் வினவில் 
மையனி கண் மடவார் பலர்
வந்திறைஞ்ச மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான் திரு
   ஊறலை உள்குதுமே (4)
எண்டிசை யோர் மகிழ எழின்
மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழ அளித்தானவன்
தாழு மிடம் வினவில்
கொண்டல் கடங்கு பொழில் குளிர்
பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்ட பிரான் அமருந் திரு
ஊறலை உள்குதுமே, (5-6-7)

கறுத்த மனத் தினொடுங் கடுங்காலன்
வந்தெய்தலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள்
மகிழ்ந்தா னிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்
தோளு மெய்யுந் நெரிய வன்று
ஒருத்தருள் செய்த பிரான் திரு
ஊறலை உள்குதுமே, (8)

நீரின் மிசைத்து யின்றோனிறை
நான்முகனு மறியா தன்று
தேரும் வகை நிமிர்ந் தானவன்
சேருமிடம் வினவில்
பாரின் மிசை அடியார் பலர்வந்
திறைஞ்ச மகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திரு
ஊறலை உள்குதுமே, (9)

பொன்னியல் சீவரத்தார் புளித்
தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க் கருளா
ஈசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்
உன்ன வினை கெடுப்பான் திரு
ஊறலை உள்குதுமே, (10)

கோடலிரும் புறவிற் கொடி மாடக் 
கொச்சையர் மன் மெச்ச
ஓடு புனல் சடைமேற்
கரந்தான் திரு ஊறல்
நாடலரும் புகழான் மிகு ஞான 
சம்பந்தன் சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார்
பரலோகத் திருப்பாரே, (11)



திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment