November 15, 2010

தக்கோலம் THAKKOLAM

மாநிலம் -  தமிழ்நாடு
மாவட்டங்கள் - வேலூர்
கால நேரம் - IST (ஒ.ச.நே.+5:30)

தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.


இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,919 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். தக்கோலம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தக்கோலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


காஞ்சிக்கு வடக்கில் 30 கி.மீ . தூரத்திலும், அரக்கோணத்துக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ. தூரத்திலும் சென்னைக்கு மேற்கில் 64 கி.மீ. தூரத்திலும் உள்ள இந்த ஊருக்கு சென்னையிலிருந்து 86, 91, 91பி, 107, 138பி ஆகிய எண்களுள்ள பேருந்து வழித்தடங்கள் செல்கின்றன. ரயில்மூலம் போக விரும்பினால் அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணித்தால் தக்கோலம் சென்றடையலாம்.


இது தொண்டை நாட்டின் பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் 12 ஆவது இடத்தில் உள்ள தலமாகும். இரண்டாம் நூற்றாண்டு முதலே சீரும் சிறப்பு மிக்கதாய்த் திகழ்ந்த தலம். 


சூரியபகவான், சந்திரபகவான், தக்ஷன், தாக்ஷாயணி, உததி முனிவர் ஆகியோர் வழிபட்டு முக்தியடைந்த தலம். இவ்வூரிலே ஏழு கணபதி ஆலயங்கள், ஏழு சிவாலயங்கள், ஏழு அம்மன் கோவில்கள் உள்ளன.



No comments:

Post a Comment